19/8/15

புனைவன்பு



மழைக்காற்றின் முணுமுணுப்பில் இருந்து
அவனால் விலக முடியவில்லை.
கொடும் மிருகங்களின் கூரிய பற்கள்
அவன் சமநிலையை குலைத்தப் படியிருந்தன.
தனித்து திரவக் கடலின் ஆழத்தில்
மூழ்கிய அவன், பின் மீண்டு
பாறைகளுக்கு அடியே 
இருண்ட இடுக்குக்களின் இடையில்
தேங்கிய நீரினுள் தவளைகள் புரிந்துவந்த தவத்தை
வியந்தபடி நடந்தான்.

முடியாத அவன் வானத்தின்
கடைசி கருநிற நிழலின் ஓரத்தில் பூத்த
மலரின் மெல்லிய நுனியிலும்
அவன் காதலின் பிசுபிசுப்பு குறையாதிருந்ததை நினைத்து
நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான்.




கபிலன் இல (KABILAN C L).

17/08/2015 23.13

கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக